இரட்டை இலை விவகாரம்: எழுத்துபூர்வ வாதத்தை முன்வைக்கிறார் தினகரன்

இரட்டை இலை விவகாரத்தில் இன்று, டெல்லி தேர்தல் ஆணையத்தில் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல்செய்ய உள்ளார், டி.டி.வி. தினகரன்.

இரட்டை இலை

‘இரட்டை இலை யாருக்கு... உண்மையான அ.தி.மு.க எது?’ என்பதைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இதுதொடர்பாக நீண்ட காலமாக நடந்துவந்த விசாரணை, சமீபத்தில் நிறைவுறுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், இறுதி விசாரனையை நிறைவுசெய்த ஆணையம், வழக்கின் தீர்ப்பு நாளைக் குறிப்பிடாமல்  ஒத்திவைப்பதாக அறிவித்தது. இதையடுத்து, இரட்டை இலை விவகாரம் தொடர்பான வாதங்களை நவம்பர் 13-ம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக மட்டும் சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, இன்று தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பு தங்களது எழுத்துபூர்வ வாதத்தை முன்வைக்க உள்ளனர். இதற்காக, தினகரன் மற்றும் அணியினர் தற்போது டெல்லி சென்றுள்ளனர். இதற்குப் பின், இவ்வழக்கு தொடர்பாக விசாரணை ஏதும் நடைபெறாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!