ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுத்த நாய்! கண் கலங்கிய முதலாளி !

 

ஆட்டுக்குட்டி

மதுரை மேலூரை அடுத்துள்ளது, கேசம்பட்டி கிராமம். சோலையாய் காட்சியளிக்கும் இந்தக் கிராமம், விவசாயத்துக்கு பெயர்பெற்றது. இங்கு விளையும் பொருள்கள், பல இடங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த செம்மண் கிராமத்து விவசாயி தெய்வம், அதே கிராமத்தில்  டீக்கடை ஒன்று நடத்திவருகிறார். இவர் வளர்த்த ஆடு ஒன்று, சில மாதங்களுக்கு முன் குறைமாத குட்டி ஒன்றை ஈன்றுவிட்டு இறந்தது.  அதனால், குறை மாத ஆட்டுக்குட்டிக்கு பசும்பாலை பால் டப்பாமூலம் கொடுத்துக் காப்பாற்றிவந்தார். இந்நிலையில், அவர் கடையில் வளர்த்த நாயும் குட்டிகளை ஈன்று குட்டிகளுக்கு பால் கொடுத்துவந்த நிலையில், நாளடைவில் ஆட்டுக்குட்டிக்கும் பால் கொடுக்க ஆரம்பித்துள்ளது .

நாய்

திடீரென்று ஒரு நாள், ஆட்டுக்குட்டிக்கு நாய் பால் கொடுத்த காட்சியைக் கண்ட டீக்கடை முதாலாளி தெய்வம். கண்கலங்கி அழுவிட்டதாகக் கூறுகிறார். மனிதர்கள் இடையே பல பாகுபாடும் வேறுபாடும்  இருக்கும்போது, இந்த ஜீவன்களிடம் இப்படி ஒரு பரிமாற்ற உணர்வு இருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டதாகத் தெரிவித்தார். இவரது டீக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், இந்தக் காட்சியைக் கண்டு மனம் உருகிச்செல்கின்றனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று சமூக வளைதளங்களிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!