வெளியிடப்பட்ட நேரம்: 10:05 (13/11/2017)

கடைசி தொடர்பு:10:05 (13/11/2017)

கொடநாடு எஸ்டேட்டில் இன்று ஐந்தாவது நாளாகத் தொடரும் சோதனை

ஐந்தாம் நாளாக இன்று, சசிகலா உறவினர்களின் நிறுவனங்களிலும் வீடுகளிலும் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

கொடநாடு

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், ஐந்தாம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய  82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. ஐந்தாவது நாளாக இன்று சென்னை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

தற்போது, கொடநாடு எஸ்டேட்டில் சோதனையும், அதன் மேலாளர் நடராஜனிடம் விசாரணையும் நடைபெற்றுவருகிறது. மேலும், கர்சன் எஸ்டேட்டிலும் தற்போது சோதனை நடைபெறுகிறது. நான்கு நாள்களாக புதுச்சேரி லக்ஷ்மி ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் நடைபெற்று வந்த சோதனை நிறைவுபெற்றது.