வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (13/11/2017)

கடைசி தொடர்பு:12:31 (13/11/2017)

சென்னை ஐடி அலுவலகத்தில் ஆஜரானார் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி! #ITRaid

கர்நாடகா அ.தி.மு.க அம்மா அணி செயலாளர் புகழேந்தி, இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.

புகழேந்தி

சசிகலா, தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும், ஐந்தாம் நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் என கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105  இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய  82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. ஐந்தாவது நாளாக இன்று சென்னை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், கர்நாடகா அ.தி.மு.க அம்மா அணிச் செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி, இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 11.30 மணி அளவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.

தற்போது சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறையின் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.