வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (13/11/2017)

கடைசி தொடர்பு:14:00 (13/11/2017)

7 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கு..! சபாநாயகர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கில் சபாநாயகர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த காரணத்தால் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதிநீதிக்கம் செய்தார். இதையடுத்து, ஆளும் அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'இந்த வழக்கு தொடர்பாக சபாநாயகர், அரசு தலைமைக் கொறடா, குறிப்பிடப்பட்ட 7 எம்.எல்.ஏ-க்கள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.