கொடைக்கானல் குளத்துமீன்களால் ஆபத்து! எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்

press meet

கொடைக்கானல் குளத்தில் இருக்கும் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களில்  மெர்குரி அளவு அதிகமாக உள்ளது என்றும் அதைக் கர்ப்பிணி பெண்கள் உணவாக எடுத்துக்கொண்டால் மிகப்பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராம் மதுரை கிருஷ்ணய்யர் ஹாலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அப்போது "இந்தியன் யூனி லீவர் 1983 முதல் 2001 வரை தெர்மா மீட்டர் தயாரிப்பில் ஈடுபட்டது. அப்போது பாதரசத்தை முறையாகக் கையாண்டு அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டார்கள் அதன் விளைவு பாம்பார் நதி சீர்கெட்டது. மேலும், கொடைக்கானல் ஏரி, குளம் என்று சுகாதாரக் கேடாக மாறியது.

மேலும், அங்கிருந்து வரும் நீர்கள் பக்கத்து இடங்களுக்குச் செல்வதால் ஒட்டு மொத்த இயற்கைச் சூழலும் மாறியது. ஹைதராபாத்  ஐ.ஐ.டி-யிலிருந்து ஆசிப் குரோசி கடந்த ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல், கொடைக்கானல் நிர்வாகத்துக்கு அனுப்பிய அறிக்கையில் அமெரிக்கா சுற்றுலாத்துறை கணக்கீட்டீன்படி சாதாரணமாக மெர்குரி அளவு 30 ஆக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. நம்ம ஊர்  கொடைக்கானல் ஏரி குளம் மற்றும் உயிரின தாவரங்களில் மெர்குரி அளவு 41 ஆக உள்ளது. எனவே, அதன் அடிப்படையிலும் மேலும், அரசு சார்பாக ஆய்வு செய்தும் கொடைக்கானலில் உள்ள சுற்றுச்சூழல் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தெரித்துள்ளார். எனவே, விரைவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானல் குளத்தில் இருக்கும் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களில் மெர்குரி அளவு அதிகமாக உள்ளது அதைக் கர்ப்பிணி பெண்கள் உணவாக எடுத்துக்கொண்டால் மிகவுப்பெரும் ஆபத்து ஏற்படும். எனவே, இது போன்ற நிலையைக் கருத்தில் கொண்டு அரசு விரைவு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!