வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (13/11/2017)

கடைசி தொடர்பு:16:09 (13/11/2017)

பாஜக எம்.எல்.ஏ 3 பேரின் நியமனம் ரத்து! புதுச்சேரி சபாநாயகர் அதிரடி

பா.ஜ.க-வைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரையும் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாகத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவர்களுக்குச் சட்டசபையில் அலுவலகம், அடையாள அட்டை மற்றும் பேரவையில் இருக்கை ஒதுக்க வேண்டுமென மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் வரும் 23-ம் தேதி சட்டசபை கூடவுள்ள சூழ்நிலையில்  சபாநாயகர் வைத்தியலிங்கம் அறிவுறுத்தலின் பேரில் சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ஜ.க-வை சேர்ந்த 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனம் செய்து வைத்தது செல்லாது. துணைநிலை ஆளுநர் செய்து வைத்த பதவிப்பிரமாணம் ஏற்கத்தக்கதல்ல என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க