'தந்தையால் உயிருக்கு ஆபத்து' - எஸ்.பி அலுவலகத்தில் நீதிபதி மகள் கதறல்!

உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய நீதிபதியின் மகள் ஒருவரே பாதுகாப்பு வேண்டி எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் சார்பு நீதிபதியாக இருப்பவர் அசீம். இவர் மகள் தமீம் என்பவர் பெல்காந்தி என்பவரை காதலித்து வந்தார். இதற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த வாரம் பெல்காந்தியைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சார்பு நீதிபதி அசீம், கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவரின் மகள் தமீம் காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், “என் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தை அடியாள்களைக் கொண்டு கொலை செய்துவிடுவதாகத் தொடர்ந்து மிரட்டி வருகிறார். இதனால், என் தந்தையால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார். வேலூர் சார்பு நீதிபதி மகள் தமீமும் அவர் கணவரும் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் சார்பு நீதிபதி மகள் தமீம், பெல்காந்தியும் வழக்கறிஞர்கள் புடைசூழ காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!