ஒருபக்கம் குறைகேட்கும் கலெக்டர்... மறுபக்கம் தூங்கும் அதிகாரிகள்!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடத்திய மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பலர் தூங்கி வழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டம்

வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவரும் தங்களது அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்களை நடத்துவது வழக்கம். இந்தக் கூட்டங்களில் நீண்ட நாள்களாகத் தீர்க்கப்படாத, தங்கள் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பணம் செலவு செய்து மக்கள் வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் ஆட்சியர் நடராஜன் தலைமையில் குறைதீர்ப்புக் கூட்டம் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்த மனுக்களுடன் மாவட்ட ஆட்சியரின் முன் வரிசையில் நின்று முறையிட்டுக்கொண்டிருந்தனர். இந்தக் குறைகள்குறித்து கேட்க வேண்டிய துறை அலுவலர்களோ நன்றாகத் தூங்கி வழிந்தபடி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனர். 

ராமநாதபுரம் ஆட்சியர் நடத்திய குறைதீர்ப்பு கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிகாரிகள்
 

இதைக் கண்ட பத்திரிகை புகைப்படக்காரர்கள் படம் பிடித்தனர். இதுபற்றி அறிந்த மாவட்ட ஆட்சியர் நடராஜர் புகைப்படக்காரர்களை அழைத்து படம் பிடித்ததுகுறித்து கேட்டபோது, அதிகாரிகள் தூங்கி வழிவதைக் கூறியுள்ளனர். இதைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் இனி இதுபோன்று நடக்காத வகையில் அதிகாரிகளுக்குத் தனியாகக் கூட்டம் நடத்தி எச்சரிக்கை செய்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!