நகுல் நடிக்கும் 'செய்' படத்தின் டீசர் ! | Nagul's 'sei' Movie teaser released

வெளியிடப்பட்ட நேரம்: 18:37 (13/11/2017)

கடைசி தொடர்பு:08:42 (14/11/2017)

நகுல் நடிக்கும் 'செய்' படத்தின் டீசர் !

'பாய்ஸ்' படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராக நடித்த நகுல், சோலோ ஹீரோவாக நடித்த திரைப்படம் 'காதலில் விழுந்தேன்'. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவந்த நகுல், வித்தியாசமான கதைகளைத் தேடி நடித்துவருகிறார். 'நாரதன்'  படத்துக்குப் பிறகு நகுல் நடிக்கும் திரைப்படம் 'செய்'.

வித்தியாசமான கதைக் களத்தைக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை ராஜ் பாபு இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கான கதையை மட்டும் ராஜேஷ் கே ராமன், விக்னேஷ் என இருவர் எழுதியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் டீசர், இணையத்தில் இன்று வெளியானது. படம் டிசம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க