கோவையில் சாய்பாபா புண்ணிய பாதுகை - அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!

சாய்பாபா புண்ணிய பாதுகை

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா சமாதியின் நூற்றாண்டு மஹா உற்சவத்தை முன்னிட்டு தமிழகத்திலேயே முதல்முறையால கோவை சாய்பாபா கோயிலில் 'சாய்பாபா புண்ணிய பாதுகை தரிசனம்' ஏற்பாடு செய்யப்பட்டு வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.

2018 அக்டோபர் மாதம் 18-ம்தேதி, சத்குரு ஸ்ரீ சாய்பாபா சமாதி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி உலகெங்கும் உள்ள  சாய்பாபா பக்தர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோயிலில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்கள் சாய்பாப புண்ணிய பாதுகை தரிசனம் நடந்தது. சாய்பாபா புண்ணிய பாதுகையை வணங்கி தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் அலைமோதினார்கள். இருதினங்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்த இந்த புண்ணிய பாதுகை தரிசனத்தால் பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். கொளுத்தும் வெயிலைக் கூட பொருட்படுத்தாமல் ஒரு கிலோ மீட்டருக்கு நீண்டிருந்தது பக்தர்கள் கூட்டம். ஒவ்வொருவரும் வரிசையாக சென்று பாதுகையை வணங்க ஏற்பாடு செய்திருந்தது கோயில் நிர்வாகம். அனைவரும் காத்திருந்து பாபாவின் பாதத்தை வணங்கிச் சென்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!