40 நாள்களில் பெய்த மழையின் அளவு... நாகை, சென்னை மாவட்டங்களில் அதிகம்!

சென்னை மழை

மிழகத்தில், வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கடந்த இரண்டு நாள்களாக மழை தொடர்ந்து பெய்துவருகிறது. சென்னையில், 13-ம் தேதி பகல் மழை விட்டிருந்த சூழலில், மீண்டும் மாலை முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு வரை மழை தொடர்ந்தது. பின்னர் 14-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் மீண்டும் சீராகப் பெய்துவருகிறது.

இந்திய வானிலை மையம், கடைசியாக 13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு ஒரு வானிலை அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, “வங்கக் கடலில் தென்மேற்குப் பகுதியில் தொடங்கிய காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்றுள்ளது. வங்கக் கடலின் மேற்கு மத்தியப் பகுதியிலும் காற்றழுத்த நிலை பரவியிருக்கிறது. இதன் காரணமாக, 14-ம் தேதி (இன்று) ஆந்திரப்பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். ராயலசீமா, தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். 15-ம் தேதியன்று ஒடிசா, ஆந்திராவின் கடலோரப் பகுதிகள், தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவுகள்...

தமிழகத்தில், 12-ம் தேதி காலை 8.30 மணி முதல் 13-ம் தேதி காலை 8.30 வரை 1.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னையில் இதே காலகட்டத்தில், 46.6 மி.மீ மழை பெய்திருக்கிறது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 246.7 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை, 725.8 மி.மீ மழை பெய்திருக்கிறது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 769.3 மி.மீ மழை பெய்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!