வெளியிடப்பட்ட நேரம்: 07:35 (14/11/2017)

கடைசி தொடர்பு:08:14 (14/11/2017)

காகிதத்தில் துளையிடும் கருவிக்கு 131 வயது! டூடுள் அமைத்தது கூகுள்

கூகுள்

முக்கியமான தினங்கள், தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்டவைகளுக்கு, கூகுள் நிறுவனம் டூடுள் அமைத்து சிறப்புசெய்வது வழக்கம். அந்த வகையில் இன்று, காகிதம் துளையிடும் கருவி உருவாக்கப்பட்டு 131 ஆண்டுகள் ஆனதை நினைவுகூரும் வகையில் காகிதத் துகள்கள் நிறைந்த டூடுள் அனிமேஷன் அமைத்துள்ளது கூகுள். 

பள்ளிகளில் படிக்கும்போது தேர்வில் கூடுதல் விடைத்தாள்களைக் கட்டுவதற்கு பேப்பரில் துளையிடுவது வழக்கம். பள்ளிகளில் மட்டுமன்றி எல்லா அரசு அலுவலகங்களிலும் இந்தக் கருவி நிச்சயம் இருக்கும். காகிதங்களை, பத்திரத் தாள்களை பிசிறில்லாமல் துளையிடுவதற்கு இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.  Friedrich Soennecken என்பவரால் நவம்பர் மாதம் 14-ம் தேதி 1886 ல் உருவாக்கப்பட்டது இந்தக் கருவி. ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட இந்த மெஷின், பிறகு பல்வேறு நாடுகளிலும் அலுவலகப் பணிக்காக பயன்படுத்தப்பட்டுவருகிறது. நம் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கருவிக்கு கூகுள் நிறுவனம் டூடுள் அமைத்துள்ளது.  இன்று நமது நாட்டின் முதல் பிரதமர் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி 'குழந்தைகள் தினம்' கொண்டாடப்பட்டு வருவதும் அன்றைய தினத்தின் மற்றுமொறு சிறப்பம்சம்.