இரட்டை இலை விவகாரம்: சசிகலா அணியினர் எழுத்துபூர்வ வாதம் தாக்கல்

இரட்டை இலை விவகாரத்தில், நேற்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பினர் எழுத்துபூர்வ வாதத்தைத் தாக்கல்செய்தனர்.

இரட்டை இலை

‘இரட்டை இலை யாருக்கு... உண்மையான அ.தி.மு.க எது?’ என்பதைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணையைத் தலைமைத் தேர்தல் ஆணையம் அக்டோபர் 9-ம் தேதி தொடங்கியது. இதுதொடர்பாக நீண்ட காலமாக நடந்துவந்த விசாரணை, சமீபத்தில் நிறைவுறுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், இறுதி விசாரணையை நிறைவுசெய்த ஆணையம், வழக்கின் தீர்ப்பு நாளைக் குறிப்பிடாமல்  ஒத்திவைப்பதாக அறிவித்தது. இதையடுத்து, இரட்டை இலை விவகாரம் தொடர்பான வாதங்களை நவம்பர் 13-ம் தேதிக்குள் எழுத்துபூர்வமாக மட்டும் சமர்ப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, டெல்லி தேர்தல் ஆணையத்தில் சசிகலா தரப்பினர் நேற்று எழுத்துபூர்வமான வாதத்தை சமர்ப்பித்தனர். சசிகலா அணியின் சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் வாதத்தை முன்வைத்தார். மொத்தம் 111 பக்கங்கள்கொண்ட வாதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிரணியினர் சார்பிலும் புதிய வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால், சசிகலா தரப்பு மூன்று நாள் அவகாசம் கோரியுள்ளனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!