நாளை வரை கனமழை தொடரும் | rain likely to continue for next two days

வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (14/11/2017)

கடைசி தொடர்பு:09:35 (14/11/2017)

நாளை வரை கனமழை தொடரும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 'நாளை வரை கனமழை தொடரும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கடந்த இரண்டு நாள்களாக மழை தொடர்ந்து பெய்துவருகிறது. சென்னையில், 13-ம் தேதி பகல் மழை விட்டிருந்த சூழலில், மீண்டும் நேற்று மாலை முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவு வரை மழை தொடர்ந்தது. பின்னர் இன்று அதிகாலை 5 மணி முதல் மீண்டும் சீராகப் பெய்துவருகிறது.

’வங்கக் கடலில் தென்மேற்குப் பகுதியில் தொடங்கிய காற்றழுத்தத் தாழ்வுநிலை வலுப்பெற்றுள்ளது. வங்கக் கடலின் மேற்கு மத்தியப் பகுதியிலும் காற்றழுத்த நிலை பரவியிருக்கிறது. இதன் காரணமாக, இன்று ஆந்திரப்பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். ராயலசீமா, தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். 15-ம் தேதியன்று ஒடிசா, ஆந்திராவின் கடலோரப் பகுதிகள், தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யும்’ என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.