சென்னையில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற இடமாக அறிவிக்கப்பட்ட 35 வார்டுகள் இவைதான் ! | Chennai Corporation announced about open-defecation-free places in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (14/11/2017)

கடைசி தொடர்பு:18:04 (14/11/2017)

சென்னையில் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற இடமாக அறிவிக்கப்பட்ட 35 வார்டுகள் இவைதான் !

 சென்னை பெருநகர மாநகராட்சியில், 35 வார்டுகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் இதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம் எனவும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசு 'சுவச் பாரத்' திட்டத்தின் கீழ் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத திட்டம் (Open Defecation Free) செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், 14.03.2017 அன்று 46 வார்டுகள், 21.06.2017 அன்று 15 வார்டுகள், 16.08.2017 அன்று 54 வார்டுகள், 25.10.2017 அன்று 50 வார்டுகள் என மொத்தம் 165 வார்டுகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகள் என அறிவித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து தற்போது, 35 வார்டுகள் திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்  கீழ் பட்டியலிடப்பட்டுள்ள வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிபுரியும் அலுவலர்கள், சுயஉதவிக் குழுக்கள், தனியார் பகுதியில் எங்கும் திறந்தவெளியில் மலம் கழிப்பதில்லை என சான்றிதழ்களின் மூலம் அறிவிப்புகள் சமர்ப்பித்துள்ளார்கள். மேலும், அவர்கள் தங்கள் சொந்த வளாகத்தில் உள்ள கழிப்பறையையே பயன்படுத்துகிறார்கள். கழிப்பறை இல்லாத குடும்பங்களில், தங்கள் வளாகத்தில் கழிப்பறை கட்ட போதிய இடம் இருக்கும் பட்சத்தில், மத்திய அரசு உதவியுடன் கழிவறை கட்ட  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்லது தங்கள் வளாகத்தில் கழிப்பறை கட்ட போதுமான இடம் இல்லாத பட்சத்தில் அவர்கள் தங்கள் பகுதியிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள ஒரு சமுதாய கழிப்பறையை அணுகி உபயோகப்படுத்தலாம் என்ற நிலை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கீழ்க்கண்ட மண்டலத்திற்குட்பட்ட வார்டுகள், திறந்தவெளிக் கழிப்பிடமற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:


 

இது குறித்து பொதுமக்களின் கருத்து மற்றும் குறைகள் நிவர்த்தனைகளை இவ்வறிவிப்பு வெளியிட்டு 15 நாள்களுக்குள்  அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் பொருட்டு தேவை ஏற்பட்டால் பட்டியலில் குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.