ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்

வருமான வரித்துறை சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து, சசிகலா குடும்பத்துக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர், இன்று சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில்  விசாரணைக்காக ஆஜர் ஆனார்கள். 

ஜாஸ் சினிமாஸ்


சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நாள்கள் அதிரடிச் சோதனை நடத்தினார்கள். தமிழகம், பெங்களூரு எனப் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கட்டுக்கட்டாக ஆவணங்கள், கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டன. இந்தச் சோதனைகளைத்  தொடர்ந்து, ஆவணங்களின் உண்மைத்தன்மைகுறித்து வருமான வரித்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது.

ஜெயா தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரி விவேக்கை, நேற்று வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இரவு வரை அவரிடம் விசாரணை நீடித்தது. சோதனை சம்பந்தமாக 355 பேருக்கு நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, சசிகலாவின் குடும்பத்துக்குச் சொந்தமான ஜாஸ் சினிமாஸ் ஊழியர்கள் 3 பேர், இன்று சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்கள். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!