வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (14/11/2017)

கடைசி தொடர்பு:13:20 (14/11/2017)

'தமிழகத்தின் தலைவி நயன்தாராவாம்!' - சொல்கிறது மலையாள மனோரமா!

நடிகை நயன்தாரா

'அறம்' சினிமா வெளியான பிறகு, நடிகை நயன்தாராவை அவரது ரசிகர்கள் 'தலைவி' எனக் கொண்டாடுவதாக, பிரபல மலையாளப் பத்திரிகையான 'மலையாள மனோரமா' செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தப் பத்திரிகையின் ஆன்லைன் பதிப்பில் வெளியான செய்தியின் தமிழாக்கம் இங்கே... '' தமிழர்கள், ஜெயலலிதாவுக்குப் பிறகு அவ்வளவு எளிதில் வேறு யாரையும் 'தலைவி' என்று அழைத்ததில்லை. 'அறம்' திரைப்படத்துக்குப் பிறகு, நயன்தாராவை 'தலைவி' என்று அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னையில் நடந்த 'அறம்' திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க நயன்தாரா வந்தபோது, 'எங்கள் தலைவி நயன்தாரா வாழ்க ' என  ரசிகர்கள் கோஷம் எழுப்பினர். அந்த நிகழ்ச்சியில், 'அறம்' திரைப்படத்தில் வருவது போலவே எளிமையான காட்டன் உடை அணிந்தே நயன்தாரா பங்கேற்றார். ஆடம்பரங்களைத் தவிர்த்திருந்தார்.

சமீப காலங்களில், நயன்தாரா கவர்ச்சியாக நடிப்பதில்லை. 'மாயா' போன்ற கதையம்சம்கொண்ட சினிமாக்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். தமிழகத்தின் சமூகப் பிரச்னைகளைப் பேசும் படமாக வெளிவந்த அறம், தமிழக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஹீரோக்களை மட்டுமே கொண்டாடும் தமிழ் ரசிகர்கள், நடிகையைக் கொண்டாடுவது சாதாரண விஷயமில்லை. நயன்தாராவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தை 'தலைவா' என்று அழைப்பதுபோல நயன்தாராவுக்கு 'தலைவி' என்று பட்டம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டியவர்களே இந்த தென்மாநிலத்தில் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை அலங்கரித்துவருகின்றனர்'' எனச் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களை எப்போதான் சேட்டன்ஸ் புரிஞ்சுக்கப்போறாங்களோ?!

நீங்க எப்படி பீல் பண்றீங்க