வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (14/11/2017)

கடைசி தொடர்பு:16:45 (14/11/2017)

ஒருவாரம் போராடி உயிர்விட்ட யானை! - சோகத்தில் கோவை

elephant

கடந்த ஒருவாரமாக காலில்  காயத்துடன் அவதியுற்றுவந்த ஆண்யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை விதைத்துள்ளது.

கோவையில் யானைகள் இறப்பு என்பது தொடர் கதையாகி வருகிறது. வனச்சூழல் மாறுபாட்டாலும், மனிதர்களின் அத்துமீறலாலும் இறக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒருபக்கமென்றால், உடல்நிலை  மோசமாகி இறக்கும் யானைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கோவையில் ஒரு ஆண் யானை உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனளிக்காமல்  இறந்துள்ளது.

கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம் வனச்சரகத்தை அடுத்துள்ள பனப்பள்ளி வனப்பகுதிக்கு அருகில் உள்ள பட்டா நிலத்தில் கடந்த ஒரு வார காலமாக உடல்நலம் குன்றியநிலையில் ஒரு ஆண்யான பரிதவித்து வந்தது. வனத்துறையினரும், வனத்துறை மருத்யுவர்களும் தொடர் கண்காணிப்பில் இருந்த அந்த ஆண்யானை இன்று அதிகாலை 4 மணி அளவில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய வனத்துறையினர், "காலில் காயத்தோடு கஷ்டப்பட்டு வந்த  யானையை காப்பாற்றிவிடலாம்  என்று ஒருவார காலமாக கடுமையாக போராடினோம். எங்களால் முடிந்த சிகிச்சையை அளித்துவந்தோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் யானை உயிரிழந்துவிட்டது. போஸ்ட்மார்டம் செய்யும் பணிகள் நடந்துவருகிறது என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க