'இனியும் சேராதிருப்போர் சேர்க!' - கமல் அழைப்பு

நடிகர் கமல்ஹாசன் `விவசாயத்துக்காகக் குரல்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும்’ என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.

kamal
 

கடந்த நவம்பர் 4-ம் தேதி சென்னை அடையாற்றில் நடந்த விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். “உழவர்களுடன் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. நான் உழவன் மகன் அல்ல. உழவின் மருமகன்” என்று பேசினார்.

இந்நிலையில் இன்று ட்விட்டரில், `அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்’ என்று பதிவிட்டு விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

டெல்லியில் வரும் நவம்பர் 20-ம் தேதி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் பேரணியும் அதைத் தொடர்ந்து மூன்று நாள் விவசாயிகள் பாராளுமன்றம் நடைபெறுகிறது. இதற்கு ஆதரவளிக்கும் விதமாக கமல் ட்வீட் செய்துள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!