மணல் குவாரியால் அழிந்துகொண்டிருக்கும் திருமழப்பாடி கிராமம்! கலெக்டரிடம் மனு கொடுத்த கட்சி

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியால் எங்கள் பகுதியே அழிந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஆளும் கட்சியினரும் உடந்தை இப்பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.


அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கடந்த பல ஆண்டுகளாக மணல் குவாரி செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன் மணல் குவாரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் திருமழப்பாடி அருகே கொள்ளிடம் ஆற்றில் புதிய மணல் குவாரி அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே பல ஆண்டுகளாக மணல் குவாரிகள் செயல்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய மணல் குவாரி அமைக்கப்பட்டால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்படும் நிலை வந்துவிட்டது.அதேபோல் அ.தி.மு.க-வினர் துணையோடு பலர் திருட்டு மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எந்த அதிகாரிகளும், ஆய்வு செய்தது கிடையாது சம்பந்தபட்டவர்களுக்கு முறையாக மாமூல் போய்கொண்டிருக்கிறது. இதை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். அதே போல் மணல் குவாரி அமைக்க மாவட்ட ஆட்சியர் தடைவிதிக்க வேண்டும். மேலும் கீழப்பழுர் அருகே உள்ள ராம்கோ சிமென்ட் ஆலை செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைத்துள்ளது. இதற்காக கனரக வாகனங்கள் செல்ல அருகில் உள்ள நீரோடையை ஆக்கிரமித்து சாலை அமைத்துள்ளதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் லெட்சுமிபிரியாவிடம் மனு அளித்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!