தமிழகத்தில் 7 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் ஏழு ஐ.பி.எஸ் அதிகாரிகள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம்


அதிகாரிகள் இடமாற்றம் சம்பந்தமாக தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கோவை மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ், திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகரக் காவல் ஆணையராகப் பதவி வகித்த ஏ.அருண், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கூடுதல் ஆணையராக இருந்த பெரியய்யா, கோவை மாநகரக் காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவில் பொதுவிநியோகம் மற்றும் தடுப்புப் பிரிவு சி.ஐ.டியாக இருந்த ஜி.வெங்கட்ராமன், சென்னைக் காவல் நிர்வாக ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னைக் காவல் நிர்வாக ஐ.ஜியாக இருந்த தினகரன், சென்னை காவல்துறையின் ஸ்தாபன ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்டர்கேடர் டிபுடேஸன் பிரிவு துணை ஐ.ஜி. சோனல் வி.மிஸ்ரா, சென்னைக் காவல் பயிற்சி கல்லூரி துணை ஐ.ஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்திலிருந்து பணிமாற்றத்தில் வரும் ஐ.பி.எஸ் அதிகாரியான அமனந்த் மான், சென்னை அமலாக்கப்பிரிவு சூப்பிரன்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!