தந்தைக்கு மறுவாழ்வு கொடுத்த மகள்! ராஞ்சியில் நெகிழ்ச்சி சம்பவம்

ராஞ்சியைச் சேர்ந்த மருத்துவர் ரச்சிட் பூஷன் (DrRachit Bhushan Shrivastva) தன்னிடம் சிகிச்சை பெற வந்தவர் குறித்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்ட செய்தி தற்போது வைரலாகி உள்ளது. 

தந்தைக்கு கல்லீரலை வழங்கிய மகள்


அவருடைய ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருப்பதன் சாரம்சம் இதுதான். ’பலருடைய வாழ்க்கையில் தந்தைதான், ரியல் லைஃப் ஹீரோ.  மகள்களுக்காக எந்த ரிஸ்க் எடுப்பதற்கும் அஞ்சாதவர்களாய் இருப்பார்கள். இந்தப் பெண் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால், இவள் தன்னுடைய கல்லீரலை தனது தந்தைக்கு வழங்கி அவருக்கு உயிர்கொடுத்துள்ளார். இப்போது எனக்கு சூப்பர் ஹீரோவாக காட்சியளிக்கும், இவளை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார். தந்தைக்காக தன்னுடைய கல்லீரலை வழங்கிய பூஜா பிஜர்னியாவுக்கு (Pooja Bijarnia) சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இளைய சமுதாய பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக இருப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சல்யூட் பூஜா..!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!