’நான் கொல்லவில்லை’ - ஹரியானா சிறுவன் கொலையில் மீண்டும் குழப்பம்!

சிறுவன்

ரியானா மாநிலம் குருகிராமில் இருக்கும் ரேயான் சர்வதேசப் பள்ளியில் கடந்த செப்டம்பர் 8-ம் தேதி இரண்டாம் வகுப்புப் படிக்கும் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தக் கொலைக்கு அந்தப் பள்ளியில் வேலை பார்க்கும் நடத்துநர் ஒருவர்தான் காரணம் என்று முதலில் சொல்லப்பட்டது, பின்னர், வழக்கில் சந்தேகம் இருப்பதாகக் கூறி குழந்தையின் பெற்றோர், வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அதன்பின் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த சி.பி.ஐ,, சிறுவன் கொலை தொடர்பாக அதேபள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவர் ஒருவரைக் கைது செய்தனர். பள்ளியில் நடைபெறவிருந்த தேர்வுகளைத் தள்ளி வைப்பதற்காகக் கொலை செய்திருக்கிறார் என்று அந்த மாணவர் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் சி.பி.ஐ-யின் துன்புறுத்தல் காரணமாகவே அந்த மாணவர் அப்படி வாக்குமூலம் கொடுத்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது ரேயான் பள்ளி சிறுவன் கொலை வழக்கில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!