சென்னை குடிநீர் ஏரிகளில் 45 நாள்களில் சேமிக்கப்பட்ட தண்ணீர் அளவு...

குடிநீர் ஏரி செம்பரம்பாக்கம்

பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளும் சென்னைக்கு குடிநீர் ஆதாரங்கள். கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இப்போது வரை பெய்திருக்கும் மழையால் இந்த நான்கு ஏரிகளும் கணிசமான அளவுக்கு நிரம்பி இருக்கின்றன. குடிநீர் பற்றாக்குறையில் தவித்த சென்னை மக்களுக்கு இது ஆறுதல் தரும் செய்தியாக இருக்கிறது. சென்னை குடிநீர் வாரியம் அளித்துள்ள தகவலின்படி இந்த நான்கு ஏரிகளிலும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மிக, மிகக் குறைந்த அளவாக 369 மில்லியன் கன அடி தண்ணீர்தான் இருந்தது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அக்டோபர் 1-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால், இந்த ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நான்கு ஏரிகளிலும் சேர்த்து 4,309 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. கடந்த 45 நாள்களில் மட்டும் 4 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் ஏரிகளில் சேமிக்கப்பட்டிருக்கிறது.

வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை வடகிழக்குப் பருவமழை தொடருகிறது. எனவே, இந்த ஏரிகள் முழுமையாக நிரம்பும் என்று எதிர்பார்க்கலாம். சென்னையில் தொடர்ந்து மழை பெய்ததால், நீர் நிலைகள் மட்டும் நிரம்பவில்லை. நிலத்தடி நீரும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. வரும் ஆண்டில் குடிநீருக்கு தவிக்க வேண்டிய சூழல் இருக்காது என்று கூறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!