லஞ்சம் வாங்கிய சிவகாசி நகராட்சிப் பொறியாளர் கைது!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சிப் பொறியாளர் ரவீந்திரன், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரவீந்திரன்

சிவகாசி நகராட்சிக்குட்பட்ட 2, 6, 26ஆகிய வார்டுகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்க, சிவகாசி நேருஜி நகரைச் சோ்ந்த பழனிச்சாமி என்பவா் ஒப்பந்தம் செய்துள்ளார். மூன்று வார்டுகளில், 6 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன. அவருடைய பில்லை பாஸ் செய்வதற்கு மொத்தத் தொகையில் 6 சதவிகிதம் கமிஷனாகக் கேட்டுள்ளார் பொறியாளர் ரவீந்திரன். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிச்சாமி, 25 ஆயிரம் தருகிறேன் என்று சொல்லி பேரம் பேசியுள்ளார். அதற்கு படிந்துவிட்ட பொறியாளர் ரவீந்திரன், காரனேசன் முக்கு அருகேயுள்ள பொறியாளா் குடிருப்புக்கு வந்து பணத்தைக் கொடுக்கச் சொல்லியுள்ளார்.  இதைப்பற்றி  விருதுநகர்  லஞ்ச ஒழிப்புப் போலீஸிடம் புகார்செய்தார் பழனிச்சாமி. லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ஸ்ரீனிவாசப்பெருமாள் தலைமையில் ஒப்பந்தக்காரா் பழனிச்சாமியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டைகளைக் கொடுத்துள்ளனா்.  அதைப் பொறியாளா் ரவீந்திரன் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புப் போலீஸார்  கைது செய்துள்ளனா். தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!