Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஹைதராபாத் எம்.பி., அசாதுதீன் உவைசி வருகை... பதற்றத்தில் ஓசூர்!

ஹைதராபாத் தொகுதி எம்.பி.யும், மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சித் தலைவருமான அசாதுதீன் உவைசி, அதிரடியான கருத்துகளைக் கூறி அவ்வப்போது பரபரப்பைக் கிளப்புபவர். அவர், வரும் 19-ம் தேதி ஓசூருக்கு ஒரு கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.

 

அசாதுதீன் உவைசி

'வீடு திரும்புதல்' என்ற பெயரில், இந்து மத அமைப்புகள் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை மதமாற்றம்செய்யும் நிகழ்ச்சிகள் குறித்துத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அசாதுதீன் உவைசி, ஒவ்வொருவரும் முஸ்லிமாகவே பிறந்து, அதன்பின்னரே பிற மதங்களுக்கு மாற்றப்படுகின்றனர் என்று கூறி, பரபரப்பைக் கிளப்பியவர். 

இப்படிப்பட்ட அதிரடி அரசியல் தலைவரைத்தான், ஓசூரில் நவம்பர் 19-ம் தேதி சிறப்புரை ஆற்ற, 'இந்தியாவின் அக்னிப் பிரவேசம்', 'மார்க்கத்தின் சிங்கம்' என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, தமிழக மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லீமன் கட்சியின் துணைச் செயலாளர் இம்தீயாஸ் என்பவர் தலைமையில் கூட்டம் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. 

அசாதுதீன் வருகைக்காக சுவர் விளம்பரம்

தகவல் அறிந்த பி.ஜே.பி., இந்து முன்னனி, அகில இந்திய விஷ்வ இந்து பரிஷத், தமிழ்நாடு விஷ்வ  இந்து பரிஷத், சிவசேனா, இந்து மக்கள் கட்சி என எல்லா இந்து அமைப்புகளும் சேர்ந்து, அசாதுதீன் உவைசி கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் புகார் மனு கொடுத்துள்ளனர். மீறி, அசாதுதீன் உவைசி வருகை தந்தால், அன்றைய தினம் நாங்கள் பந்த் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு. அதைத் தடுக்க முடியாது என்று ஓசூர் பொறுப்பு டி.எஸ்.பி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர், இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளை அழைத்துப் பேசிவருகிறார். முஸ்லிம் அமைப்புகள், எந்தப் பிரச்னையுமின்றி கூட்டம் நடத்துவோம் என்று கூட்டத்துக்கு அனுமதி கேட்டு நிற்கின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை, அடுத்து என்னசெய்வது என்று தெளிவான முடிவு எடுக்க முடியாமல் பதற்றத்தில் உள்ளனர். ஆனால் முஸ்லிம் அமைப்புகள், அசாதுதீன் உவைசிக்கு வரவேற்பு அளித்து சுவர் விளம்பரம்செய்ய ஆரம்பித்துவிட்டன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement