`கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்!' - வைரலான வீடியோகுறித்து கமல் ட்வீட்!

நடிகர் கமல்ஹாசனின் புகைப்படத்தை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்துவது போன்ற வீடியோ, இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோவை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாகவே அரசியல்குறித்து கருத்து கூறிவருகிறார். சீக்கிரமே கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்துவருகிறார். தனது கருத்துகளை ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தனது ட்விட்டர்மூலம் தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன், `இந்து தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது' என்ற கருத்தைக் கூறினார். இதுகுறித்து இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். 

கமல்ஹாசன்

இந்நிலையில், சிறுவன் ஒருவன் கமலின் புகைப்படத்தைக் கத்தியால் குத்துவது போல ஒரு வீடியோ இணையத்தில் உலவியது. கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், `என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும். அதன்முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!