கோடிக்கணக்கில் பரிவர்த்தனை... கொடநாடு எஸ்டேட் மேலாளர் ஒப்புக்கொண்டதாகத் தகவல்! | IT Officials enquried Kodanad estate Manager

வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (15/11/2017)

கடைசி தொடர்பு:08:10 (15/11/2017)

கோடிக்கணக்கில் பரிவர்த்தனை... கொடநாடு எஸ்டேட் மேலாளர் ஒப்புக்கொண்டதாகத் தகவல்!

கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்ததாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கொடநாடு எஸ்டேட்

சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் ஐந்து நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் என தமிழகம் முழுவதும் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று ஆறாவது நாளாக கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை ரகசிய இடத்தில் வைத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே, கொடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டில் நடைபெற்ற சோதனை நேற்று மாலை முடிந்தது.

நடராஜன்

 

இதையடுத்து, மேலாளர் நடராஜனை கோவை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு அழைத்துவந்து, அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர், கோடிக்கணக்கில் பணப் பரிவர்த்தனை நடந்ததை ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத்தொடர்ந்து, அவரை மீண்டும் நாளை மறுநாள் வியாழக்கிழமை, கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.