மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்..! | Fishermen strike in Rameswaram

வெளியிடப்பட்ட நேரம்: 09:03 (15/11/2017)

கடைசி தொடர்பு:10:57 (15/11/2017)

மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்..!

இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக் காவல்படையினர் துப்பாகியால் சுட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். அதில், இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு, தமிழக அரசியல் கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். இதைக் கண்டிக்கும் விதமாக, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில், சுமார் 75,000 மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.