தருமபுரி இளவரசனின் மரணம்: நீதிபதி சிங்காரவேலன் முன்பு கலெக்டர், எஸ்.பி சாட்சி

தருமபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளவரசன் - திவ்யா காதல் சம்பவத்தில், கடந்த 4.7.2013 அன்று தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம், ரயில்வே தண்டவாளத்தில் தலையில் படுகாயத்துடன் சடலமாக மீட்கப்பட்டார் இளவரசன். 

இளவரசன் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கவே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தனி நபர் கமிஷன் அமைப்பதாக அறிவித்தார். அதன்படியே, ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலன் தலைமையில் விசாரணைக்குழு அமைத்தார். 

கலெக்டர் சாட்சியம்

பல்வேறு கட்டங்களாக நடைபெற்றுவந்த விசாரணையில், திவ்யாவும், இளவரசன் குடும்பத்தினர் உள்பட விடுதலை சிறுத்தைகள் மற்றும் பா.ம.க-வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள், தனி நபர் விசாரணை கமிஷன் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலனிடம் சாட்சியம் அளித்தனர். 

இன்று, தருமபுரி பொதுப்பணித்தறை சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற விசாரணையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டிட் கங்காதர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனைப் பிரிவுத் தலைமை மருத்துவர் தண்டர்சீப் மற்றும் தமிழக விவசாயிகள் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி உள்ளிட்டவர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலன் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!