கோவை மாநகரம் வேகமான வளர்ச்சியடையும்!- ஆளுநர் உறுதி

மத்திய அரசின் 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் அதிநவீன நகரங்கள் பட்டியலில் கோவை இடம்பெற்றிருப்பதால், இந்த மாநகரம் வேகமான வளர்ச்சியை அடையும்' என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

கோவையில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 'தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை தேர்வுசெய்யப்பட்டுள்ளதால், இந்த நகரம் மேலும் வளர்ச்சியடையும். இந்த மாவட்டம் 89.23 சதவிகிதம் கல்வியறிவு பெற்றுள்ளது. இது, தேசிய சராசரியைவிட அதிகமாகும். கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்திபுரம் பேருந்து நிலையத்தைத் தூய்மையாக வைத்துள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி மற்றும் சுகாதாரப் பணிகள் சிறப்பாக உள்ளன. அகமும் புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே அனைத்து மதங்களும் வலியுறுத்துகின்றன. எனவே, மத்திய அரசின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை குடிசைப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!