நளினியை விடுதலைசெய்ய முடியாது! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு  | 'Unable to release Nalini Ealier' Says Tamilnadu Governmment in High Court

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (15/11/2017)

கடைசி தொடர்பு:16:04 (15/11/2017)

நளினியை விடுதலைசெய்ய முடியாது! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியை முன்கூட்டியே விடுதலைசெய்ய முடியாது' என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நளினி


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட, 9 பேருக்கு தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை, பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இவர்கள், கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆயுள் தண்டனை கைதிகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161-ன் கீழ் முன்கூட்டியே விடுதலைசெய்ய மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீண்டகாலம் தண்டனை அனுபவித்து இருப்பதால், என்னையும் அந்த அடிப்படையில் விடுதலைசெய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட  வேண்டும் என்று நளினி கூறியிருந்தார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

தமிழக அரசு சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், நளினியை விடுதலைசெய்ய முடியாது' என தமிழக அரசு கூறியுள்ளது. நளினியின் மனு தள்ளுபடிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.


[X] Close

[X] Close