இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்! கொண்டாடும் கூகுள் | Google celebrates birth anniversary of India's first ever woman lawyer

வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (15/11/2017)

கடைசி தொடர்பு:10:41 (16/11/2017)

இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்! கொண்டாடும் கூகுள்

வழக்கறிஞர்

ந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞரான கோர்னீலியா சொராப்ஜியின் 151-வது பிறந்தநாள் இன்று. இவர்தான் முதன் முதலில் பாம்பே பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்த பெண். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் சட்டம் படித்த பெண். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் பட்டம் படித்த இந்தியப் பெண். இந்தியா மற்றும் பிரிட்டனில் முதன் முதலில் சட்டப் பயிற்சி பெற்ற பெண். இப்படிப் பல ‘முதல்’ சாதனைகளைப் படைத்தவர்தான் கோர்னீலியா.

மகாராஷ்டிராவில் நாசிக் என்கிற பகுதியில் ஏழ்மையான குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த கோர்னீலியா, ஆங்கில தம்பதியால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். இந்தியாவில் பட்டப்படிப்பு படித்த பின்னர், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழத்தில் சட்டம் பயின்றார். கோர்னீலியாவின் 151-வது பிறந்த நாளை டூடுள் மூலம் கொண்டாடுகிறது கூகுள்.