வெளியிடப்பட்ட நேரம்: 01:32 (16/11/2017)

கடைசி தொடர்பு:09:18 (16/11/2017)

பட்டினப்பாக்கத்தில் கட்டுபாட்டை இழந்த அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது

பட்டினப்பாக்கம் அருகே வேகமாக வந்த அரசுப் பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், தனியார் ஐ.டி நிறுவன கார் டிரைவர் மற்றும் பயணிகள் சிலர் காயமடைந்தனர்.

பேருந்துவிபத்து

கேளம்பாக்கத்திலிருந்து ப்ராட்வே நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்த மாநகரப் பேருந்து, எம்.ஆர்.சி நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் எதிர்ப்புறத்தில் வந்த கார்மீது மோதியது. இந்த விபத்தில், சிறுசேரி நோக்கி சென்றுகொண்டிருந்த ஐ.டி நிறுவனத்தின் கார் டிரைவர் மணி என்பவருக்கு காலில் பலமாக அடிபட்டது. பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. விபத்து நடந்தவுடன், பேருந்து ஓட்டுநர் பேருந்தை விட்டுவிட்டு ஓடிவிட்டார். ரோட்டின் ஓரத்திலிருந்த தனியார் காம்பவுண்டு சுவரை இடித்துக்கொண்டு தோட்டத்துக்குள் நுழைந்தது. 

பேருந்துவிபத்து

 

இரவு நேரமாதலால், பெரிய அளவில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. அதன்பின், போக்குவரத்துக் காவல் துறையினர் வேறோர் ஓட்டுநரை வைத்துப் பேருந்தை சம்பவ இடத்திலிருந்து ஓட்டிச்சென்றனர். 

பேருந்துவிபத்து