கைகொடுக்க மறுத்த நாய்க்குட்டி... பின்னணி என்ன? | Cute dog refuses to let his owner shake hands with his newborn puppy

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (16/11/2017)

கடைசி தொடர்பு:08:51 (16/11/2017)

கைகொடுக்க மறுத்த நாய்க்குட்டி... பின்னணி என்ன?

னிதர் ஒருவருக்கு நாய்க்குட்டி கை கொடுக்க மறுத்தது. நாய்க்குட்டி கைகொடுத்தாலும் தாய் நாய், அதைத் தடுப்பது போன்ற வீடியோ, இணையத்தில் உலா வந்துகொண்டிருந்தது. உரிமையாளருக்கு தன் குட்டி கை கொடுப்பதைத்  தாய் நாய் தடுப்பதற்கு வேதனையான பின்னணியும் இந்தக் கதைக்கு உள்ளது.

உரிமையாளருக்கு  பப்பி கைகொடுப்பதை தடுக்கும் தாய் நாய்

 நாய், குட்டிகளை ஈன்றால், உரிமையாளர்கள் அதன் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் குட்டி நாய்களைச் சொந்த பந்தங்களுக்கு  பரிசாக வழங்குதல் மற்றும் விற்பனை செய்யும் நிலை உள்ளது. தாய் நாய் அதனால் படும் வேதனையை மனிதர்கள் புரிந்துகொள்வதில்லை.  திடீர் திடீரென்று தன் குட்டிகள் காணாமல் போவதால், தாய் நாய் வருத்தத்துடன் காணப்படும். 

சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தன் வீட்டு நாய் ஈன்ற குட்டிகளைப் பக்கத்து வீட்டாருக்குத் தானம் செய்திருக்கிறார். அந்தக் கோபத்திலும் வருத்தத்திலும் தாய் நாய், குட்டி நாயை உரிமையாளரிடம் நெருங்க அனுமதிக்கவில்லை. 'எங்கே, இந்தக் குட்டியையும் நம்மிடமிருந்து பிரித்துவிடுவாரோ' என்ற பயத்தில்தான் தன் குட்டியை அவருக்கு கை கொடுக்க அனுமதிக்கவில்லை என்ற விஷயம், தற்போது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது. லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close