ட்ரம்ப்பின் மகளுக்கு மோடியின் ட்விட்டர் பதில்!

ஹைதராபாத் நகரில் தான் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகளுக்கு, ட்விட்டரில் பதில் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

மோடி

நவம்பர் மாதம் 28-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள மூன்றாம் ஆண்டு உலகத் தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார், இவான்கா ட்ரம்ப். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகளான இவர், வெள்ளை மாளிகையின் முக்கிய ஆலோசகராகவும் உள்ளார். 

நேற்று, தன் ட்விட்டர் பக்கத்தில் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ளது என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். #GSE2017 என்ற அந்த ஹேஷ்டேக் வைரலானது.  உலகிலுள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். மேலும் அவர், ’இந்தியாவின் பிரதமர் மோடியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெரும் மகிழ்வாக உள்ளது’ என்று பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, ’அமெரிக்காவும் இந்தியாவும் பொருளாதாரரீதியில் ஒன்றிணைவது, இரு நாடுகளுக்கும் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!