இந்திய அரசியலில் புகழ்பெற்ற மனிதர் யார் தெரியுமா?

மோடி

நோட்டு முடக்கம், மாட்டுக்கறிக்குத் தடை, தலித்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் என்று மோடிக்கு எதிரான சம்பவங்களை ஊடகங்கள் பட்டியல் இடுகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான், இந்திய அரசியலில் மிகவும் புகழ்பெற்ற நபராக நரேந்திரமோடி இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ’Pew’ என்ற சர்வே அமைப்பு, கடந்த பிப்ரவரி 21-க்கும் மார்ச் 10-க்கும் இடையே ஒரு சர்வே நடத்தியது. அதில், இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியுடன் மனநிறைவு தரும் வகையில் இருப்பதாக, மோடிக்கு சாதகமான கருத்துகளைப் பலர் தெரிவித்துள்ளனர்.

சர்வேயில், நாடு முழுவதும் 2,464 பேர் பங்கேற்றுப் பதில் அளித்துள்ளனர். சர்வேயில் பங்கேற்ற 10 நபர்களில் எட்டுப் பேர், நாட்டின் பொருளாதார நிலை நன்றாக இருப்பதாகக் கூறியுள்ளனர். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, பொருளாதாரம் மிக நன்றாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பவை தங்களுக்கு திருப்தி அளிப்பதாக 10-ல் 7 இந்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா செல்லும் வழிகுறித்த சாதகமான மதிப்பீடு காரணமாக, 2014-க்குப் பிறகு சாதகமான சூழல் என்பது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மோடிக்கு ஆதரவான சூழல் இருக்கிறது.

இதேபோல, கிழக்குப் பகுதியில் இருக்கும் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு மாநிலங்களான டெல்லி, அரியானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் 10-ல் எட்டுப்பேர் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். 2015-ம் ஆண்டிலிருந்து வடக்குப் பகுதியில் மோடியின் புகழில் எந்தவித மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், மேற்குப் பகுதிகள், தென் பகுதிகளில் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. கிழக்குப் பகுதிகளில் மட்டும் சிறிதளவு மோடிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு கடந்த 2015-ல் 70 சதவிகிதமாக இருந்தது. இப்போது 49 சதவிகிதமாக இருக்கிறது.
88 சதவிகித புள்ளிகளுடன் மோடி முதலிடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில், 58 சதவிகிதப் புள்ளிகளுடன் ராகுல் இரண்டாம் இடம் வகிக்கிறார். மூன்றாவதாக சோனியா காந்தி 57 சதவிகிதம் பெற்றுள்ளார். அவருக்கும் கீழே 39 புள்ளிகளுடன் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!