”சட்டத்தைக் கரைத்துக்குடித்தவர் நமது ஆளுநர்”: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் | TN minister appreciates tamilnadu governor

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (16/11/2017)

கடைசி தொடர்பு:16:20 (16/11/2017)

”சட்டத்தைக் கரைத்துக்குடித்தவர் நமது ஆளுநர்”: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

'தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சட்டத்தைக் கரைத்துக்குடித்தவர்' என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

உதயகுமார்

கோவைக்கு, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றன.

ஆனால், ஆளுநரின் செயல்பாட்டில் தவறில்லை. இது ஆரோக்கியமான ஒன்றுதான் என அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டத்தைக் கரைத்துக்குடித்தவர். மாநில சுயாட்சி பறிக்கப்படும்நிலை தமிழகத்தில் ஏற்படாது. கச்சத்தீவை தி.மு.க தாரை வார்த்ததைப் போல மாநில சுயாட்சியைத் தாரை வார்த்துத் தர மாட்டோம்” என்றுள்ளார்.

இவ்வாறு, ”தமிழக அமைச்சர்கள் ஆளுநரின் ஆய்வை வரவேற்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல” என இன்று திவாகரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.