தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல்ஹாசன் நிதியுதவி | kamal haasan donated twenty lakhs rupees to tamil chair

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (16/11/2017)

கடைசி தொடர்பு:15:22 (16/11/2017)

தமிழ் இருக்கைக்காக நடிகர் கமல்ஹாசன் நிதியுதவி

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக, நடிகர் கமல்ஹாசன் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டுவந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங்கி நிதி திரட்டும் வேலையில் ஈடுபட்டனர். அந்த இருக்கையை அமைக்க, பல்கலைக்கழகத்துக்கு 45 கோடி ரூபாய் நிதியாகக் கொடுக்க வேண்டும். பலர் இதற்காக நிதி கொடுத்தபோதும், பற்றாக்குறை நிலவிவந்தது. 

இந்நிலையில், சமீபத்தில் தமிழக அரசு, 10 கோடி ரூபாயைத் தமிழ் இருக்கை அமைக்க நிதியாகத் தர ஒப்புக்கொண்டது. இதனால், விரைவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் என்று எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், இன்று ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக 20 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளார். சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில், இந்த நிதி உதவிக்கான காசோலையை நடிகர் கமல்ஹாசன் அளித்தார்.


[X] Close

[X] Close