வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (16/11/2017)

கடைசி தொடர்பு:18:18 (16/11/2017)

"விண்ணுலகத்தையே கொண்டுவந்து வைத்தாலும் எதிர்ப்பர்”: பொன்.ராதாகிருஷ்னன்

"விண்ணுலகத்தையே காஞ்சிபுரத்துக்குக் கொண்டுவந்து வைத்தாலும் எதிர்க்கட்சிகள் எதிர்க்கத்தான் செய்வர்” என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

கோவைக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றன.

ஆனால், ஆளுநரின் செயல்பாட்டில் தவறில்லை. இது ஆரோக்கியமான ஒன்றுதான் என அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ராஜ்பவனைவிட்டு ஆளுநர் வெளியே வந்ததை வரம்பு மீறலாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றனவா. ஆளுநர் வரம்பு மீறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. விண்ணுலகத்தையே கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் வைத்தாலும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பார்கள்” என்றார்.