மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

மேலூர் குற்றவியல் நீதிமன்றம்

அழகிரி மகன் துரை தயாநிதி உட்பட 15 நபர்கள் மீது 257 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாகக் கூறி 5,191 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகை, மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. ஒலிம்பஸ் கிரானைட், நாகராஜ், துரை தயாநிதி ஆகியோர் முதல் மூன்று நபர்களாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கீழவளவுக்கு உட்பட்ட பகுதியில், சர்வே நம்பர் 297/ 5 -ல் பல இடங்களில் அரசு சொத்துகள் இழப்பீடு செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது முன்னாள் அதிகாரி பார்த்திபன் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் டி.எஸ்.பி குருசாமி விசாரணை அடிப்படையிலும் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது . அரசு தரப்பு வழக்கறிஞர் ஷீலா ஆஜரானார். இந்த குற்றப்பத்திரிகையில், அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் பெயர் மூன்றாவது நபராக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!