மாநில உரிமைகளில் தலையிடுகிறாரா ஆளுநர் பன்வாரிலால்... உங்கள் கருத்து என்ன? #VikatanSurvey


ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவை தானா எனக்கேள்வி எழுப்பினார் முதல்வர் பேரறிஞர் அண்ணா. "ஆளுநர் பதவி என்பது தேவையற்ற ஒன்று. ஆளுநர் உரையைக்கூட ஏற்க மாட்டாமல், புறக்கணிப்போம்" என அண்ணா சொல்லி வந்த நிலையில், அவர் வழிவந்த கட்சியான அ.தி.மு.க. ஆளுநருக்கு அடிபணிந்து விட்டதா என்ற விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடு.

கோவையில் அமைச்சருக்குக் கூட தகவல் தெரிவிக்காமல், அதிகாரிகளுடன் இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்திய பன்வாரிலால் புரோஹித், இந்த ஆய்வு தமிழகம் முழுவதும் தொடரும் என அறிவித்துள்ளார். 'மத்திய அரசு ஆளுநர் மூலம் ஆட்சி நடத்தப்பார்க்கிறது. இது மாநில உரிமைகளுக்கு எதிரானது' என எதிர்கட்சிகள் ஒரே குரலில் இதைக்கண்டித்துள்ளன. அதேநேரத்தில் 'இதில் விதிமீறல் எதுவும் இல்லை. இது ஆரோக்கியமான போக்கு' எனச் சொல்கிறார்கள் ஆளுங்கட்சியின் அமைச்சர்கள்.
மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு நடத்துவது சரி தானா... இது மாநில உரிமைகளுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் சொல்வதை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்... இது குறித்த உங்கள் கருத்து என்ன? 

 

loading...

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!