விஜய்யின் அடுத்த படம்... சன் டி.வி விசிட்..!

மெர்சல்' பட அரசியல் வசனப் பரபரப்பு ஒருபுறம், அரசியலில் இறங்க ஆயத்தமாகிறார் என்ற பரபரப்பு மறுபுறம் என்று சினிமா வட்டாரத்தில் விஜய்யின் பெயர் தொடர்ந்து பேசுபொருளாகவே உள்ளது. இது எதையும் மனதில் ஏற்றிக்கொள்ளாமல் அடுத்த படத்துக்கு ஆயத்தமாகிவிட்டார் விஜய். ‘மெர்சல்’ ரிலீஸுக்கு முன்பாகவே, தயாரிப்பு சன் பிக்சர்ஸ், இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ் என்ற கேம் பிளானோடு வேலைகள் நடந்து வருகின்றன. 

ஒரு படத்தைத் தயாரித்து ரிலீஸ் செய்வது என்பது மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ள இன்றைய சினிமா சூழலில் சன் பிக்சர்ஸ் - விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் என்ற இந்தக் கூட்டணி புதிய நம்பிக்கையைத் தருகிறது. முருகதாஸ் சொன்ன ஒருவரிக் கதை தயாரிப்பு தரப்புக்கும் விஜய்க்கும் பிடித்துப்போக, அதை திரைக்கதையாக்கும் பணிகளில் அவர் உள்ளார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் விஜய்யும் முருகதாஸும் சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள சன் டிவி அலுவலத்துக்கு நேரில் சென்று சன் பிக்சர்ஸ் தயாரிப்பு தரப்பினரிடம் இந்தப் படம் குறித்து நீண்ட நேரம் மனம்விட்டு பேசி வந்திருக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!