திருப்பூரில் காய்ச்சலுக்கு சிறுவன் பலி!

திருப்பூரில், 4 வயது சிறுவன் ஒருவன் காய்ச்சல் காரணமாக மரணமடைந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

பலியான சிறுவன்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியதோட்டம் 3-வது வீதியில் வசித்துவந்தவர், சேக்பரீத். இவரது 4 வயது மகன் முகமது பைசல். இந்நிலையில், முகமது பைசலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடந்த சில நாள்களாக அங்கு பைசலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் சிறுவனுக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்திருக்கிறது. எனவே, பைசலுக்கு மேல்சிகிச்சை அளிக்க வேண்டி நேற்று கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே, சிறுவன் பைசல் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துதார். காய்ச்சலால் 4 வயது சிறுவன் மரணமடைந்த தகவல் கேட்டு, அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!