சிட்னி விமான நிலையத்தில் நேர்ந்த கதி... ட்விட்டரில் வேதனை தெரிவித்த சந்தோஷ் நாராயணன்!

`அட்டக்கத்தி' திரைப்படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர், சந்தோஷ் நாராயணன். 'சூது கவ்வும்', 'ஜிகர்தண்டா' , 'குக்கூ', 'கபாலி' போன்ற பல முக்கிய திரைப்படங்கள், இவரது இசையமைப்பில் வெளிவந்துள்ளன. இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், `நிறத்தைவைத்து தரக்குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன்

 

இதுகுறித்து அவர், `சிட்னியிலுள்ள விமான நிலையத்தில், தொடர்ந்து  எட்டாவது முறையாக அதிகாரிகள் என்னை 'ரசாயன பொருள் சோதனை'க்கு உட்படுத்தியுள்ளனர். கடுமையான முறையில் நடத்தி, என்னை அதிகாரிகள் அவமதித்துள்ளனர். இதுபோன்று 'நிறத்தைவைத்து தரக்குறைவாக நடத்துவதை நிறுத்த வேண்டும்' என்று சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, வெளிநாட்டு விமான நிலையங்களில் இந்தியப் பிரபலங்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதேபோல, இந்தி நடிகர் ஷாருக்கானும் விமான நிலையத்தில் தரக்குறைவாக நடத்தப்பட்டதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!