தீபிகா படுகோன் தலைக்கு 5 கோடி ரூபாய்... `பத்மாவதி'க்கு எதிர்ப்பு வலுக்கிறது! | Surge against Controversial film padmavati, chatriya samaj threatens to beheaded deepika padukone

வெளியிடப்பட்ட நேரம்: 06:11 (17/11/2017)

கடைசி தொடர்பு:08:24 (17/11/2017)

தீபிகா படுகோன் தலைக்கு 5 கோடி ரூபாய்... `பத்மாவதி'க்கு எதிர்ப்பு வலுக்கிறது!

பத்மாவதி

ஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான `பத்மாவதி' திரைப்படம், வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது. இது ராஜ்புத் சமூகத்தினரைப் பற்றிய வரலாற்றுப் படம் என்று கூறப்படுகிறது. தீபிகா படுகோன், பத்மாவதி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்கு,  ராஜ்புத் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாத்ரிய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த தாக்கூர் அபிஷேக் சாம், `பத்மாவதி' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும். தீபிகா படுகோன் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் அவரது தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும். இந்தப் படத்தை வெளியிடுவதை இயக்குநர் சஞ்சய் நிறுத்திவைக்க வேண்டும். மீறி படத்தை வெளியிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ராஜ்புத் பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா, எங்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியிருக்கிறார். ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த எந்த ஒரு பெண்ணும் பொதுவெளியில் நடனம் ஆட மாட்டார். இயக்குநர் சஞ்சய்க்கு, ராஜ்புத்களின் வரலாறு தெரியவில்லை. வரலாற்று உண்மையைச் சிதைத்த அவர் தண்டிக்கப்பட வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வ் பிராமின் மகாசபா என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், ரத்தத்தால் எழுதிய கடிதம் ஒன்றை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி, தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தனர். கார்னி சேனா என்ற அமைப்பு, டிசம்பர் 1-ம் தேதி பாரத் பந்த் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், 'சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து உதவிகளும் மேற்கொள்ளப்படும்' என்று மத்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close