வெளியிடப்பட்ட நேரம்: 08:55 (17/11/2017)

கடைசி தொடர்பு:08:55 (17/11/2017)

'முதல்வரிடம் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்' - ரஸ்தாவில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ரஸ்தா அருகேயுள்ள குப்பைக்கிடங்கை அகற்றக்கோரி, பல நாள்களாக  அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக,  ரஸ்தா வணிகர் சங்கம் சார்பாக நேற்று முழுக் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

ரஸ்தா

போராட்டத்தின் அடுத்தகட்டமாக,  'நாளை சிவகங்கைக்கு வருகை தரும்  தமிழக முதல்வரிடம் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்போகிறோம்' என்று போராட்டக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான சுவரொட்டிகள் அப்பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

'ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கும் நகராட்சி குப்பைக் கிடங்கையும், பாதாளச்சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதையும் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் 'என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டம்

"தற்போது, குப்பைக் கிடங்காக மாறியிருக்கும் இடத்தில்,  இதற்கு முன்பாக ஆதிதிராவிடர்களுக்கான பள்ளிக்கூடம் இருந்தது.  ஆரம்பத்தில் குப்பைகள் மட்டும் கொட்டப்பட்டுவந்த நிலையில், காரைக்குடிக்கான பாதாளச் சாக்கடைக் கழிவு நீரேற்று நிலையத்தை இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள் " என்று கொந்தளிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க