வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (17/11/2017)

கடைசி தொடர்பு:18:00 (17/11/2017)

தீபிகா படுகோனேவின் 'பத்மாவதிக்கு' கோவையில் எதிர்ப்பு!

தீபிகா படுகோனே நடித்திருக்கும் பத்மாவதி திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட கூடாது என ராஜ்புத் ராஷ்டிரிய கர்ணி சேனாவின் அகில இந்திய தலைவர் சுக்தேவ் சிங் கோகா கோவையில் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான `பத்மாவதி' திரைப்படம், வரும் டிசம்பர் 1-ம் தேதி வெளியாக உள்ளது. இது ராஜ்புத் சமூகத்தினரைப் பற்றிய வரலாற்றுப் படம் என்று கூறப்படுகிறது.தீபிகா படுகோனே, பத்மாவதி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு, ராஜ்புத் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சுக்தேவ் சிங் கோகா, "வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி இந்தியா முழுவதும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பத்மாவதி திரைப்படம் வெளியாக உள்ளது இந்தத் திரைப்படம் ராணி பத்மாவதியின் வரலாற்றைத் திரித்துக் கூறி அரச குடும்பத்தையும் இந்து கலாசாரத்தையும் அவமானப்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகையால், இந்தத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது. எங்கள் எதிர்பையும் மீறி இந்தத் திரைப்படத்தை வெளியிட்டால் போராட்டம் தீவிரமாகும். என்றவர் ராணி பத்மாவதி குறித்து தவறான கருத்தை ஏற்படுத்தும் இந்தப் படத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும்'' என்றார்.