சென்னை சுங்கத்துறை இணையதளத்தை முடக்கிய பாகிஸ்தான் ஹேக்கர்கள்

சென்னை மண்டல சுங்கத்துறை இணையதளம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்களால் முடக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கத்துறை


சென்னை மண்டல சுங்கத்துறையின் இணையதள முகவரி ‘www.chennaicustoms.gov.in’ ஆகும். இந்தத் தளம் இன்று சில ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இணையதளம் முடக்கப்பட்டதை சிறிது நேரத்தில் தெரிந்துகொண்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு இணையதளத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், மாலையில் அந்த இணையதளப் பக்கத்தை திறக்க முயற்சி செய்தபோது  தளம் செயல்படவில்லை. பராமரிப்பின் கீழ் இருப்பதாக தகவல் காட்டியது. இணையதளம் முடக்கப்பட்டது பற்றி எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தை ‘டீன் பாக் சைபர் ஸ்கல்ஸ்’ என்னும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் குழு முடக்கியதாகக் கூறப்படுகிறது.. இணையதளத்தை முடக்கிய அந்தத் தளத்தில் அவர்கள் சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவான வாக்கியங்களைப் பதிவுசெய்து இருந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!